MUTHALAMAICHAR MARUTHUVA KAAPITU THITTAM

உடல் ஆரோக்கியத்திற்கான ஹெல்த் இன்சூரன்ஸ் சேவிங் ஸ்கீம்

 

ஏழை எளிய மக்கள் உடல் நலம் பாதிப்பாலும் அல்லது அவர்களுக்கு ஏதேனும் விபத்து நேர்ந்தாலோ அந்த சமயம் அவர்களிடம் போதிய பணம் இல்லாத காரணத்தால் நிறைய இழப்புகள் ஏற்படுகிறது முக்கியமாக மனித உயிர்கள் போகிறது. இதை தடுப்பதற்காக அரசு சார்பில் ஏழை எளிய மக்களுக்கு உதவும் வகையில் தமிழ்நாடு அரசாங்கம் மக்களுக்கான ஹெல்த் இன்சூரன்ஸ் ஸ்கிமை இலவசமாக தருகிறது இதன் மூலம் மக்கள் அனைவரும் பயன் பெற முடியும் மற்றும் மிகவும் உதவியாக இருக்கும்.

 

இதற்கான திட்டம் தான் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம்.

 

ஏழை எளிய மக்களுக்குக்காக தமி ழ்நாடுஅரசி ன் மருத்துவ காப்பீடு திட்டம்

முதலமைச்சரி ன் வி ரி வா ன மருத்துவக் கா ப்பீட்டுத் தி ட்டம் (Chief Minister’s

Comprehensive Health Insurance Scheme) என்பது தமிழ்நாட்டில் குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழக அரசு வழங்கியுள்ள காப்பீட்டுத் திட்டமாகும்.   இதில் உயிருக்கு ஆபத்தான 51 வகையான நோய்களுக்கு, ரூபாய் ஐந்து இலட்சம் வரையிலான உயர் மருத்துவ சிகிச்சைகளை , அரசு மற்றும் தனி யா ர் மருத்துவமனைகளி ல்இலவசமாகப் பெறும் வகையில் செய்கிறது.  2020 ஜூன் முதல் கொரோனா வைரஸ் சிகிச்சைக்கான செலவையும்  இக்காப்பீட்டில் சேர்த்து, தனியார்   மருத்துவமனைகளுக்கா ன கட்டண விவரங்களையும்  தமிழக அரசு வெளியிட்டது.

 

வரலாறு

2009 ஜூ லை 23 ஆம் நா ள் உயர்ரக மருத்துவ சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டுத் திட்டம் என்ற பெயரி ல் புதிய காப்பீட்டுத் தி ட்டத்தைத் தமி ழக அரசு அறிமுகம் செய்தது.அப்போ து ஒரு கோ டி ஏழை குடும்பங்களுக்கு கா ப்பீட்டுத் தவணைத்(பி ரி மி யம்)தொகையா க ஆண்டொ ன்றுக்கு 517 கோ டி ரூபாயை தமிழக அரசே தனியார் காப்பீட்டு நி றுவனத்திற்கு வழங்கியது. 2011 ஜூலைமா தம் இத்திட்டம் மேம்படுத்தப்பட்டு முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் எனப் பெயர் மாற்றப்பட்டது. 

செப்டம்பர் 11 2018 அன்று இந்திய அரசின் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா திட்டத்துடன் இணைக்கப்பட்டு மத்திய மாநில அரசுகள் தவணைத் தொகையைப் பங்கிட்டுக் கொண்டனர்.

பயனாளி கள்

அரசின் அமைப்புசாரா தொழிலா ளர்  நலவாரியங்களில் உறுப்பி னர்களாக  உள்ளோரின் குடும்பங் கள் மற்றும் குடும்ப வருமா னம் ஆண்டுக்கு ரூபாய்72,000க்கும் குறை வாக உள்ள அனைத்துக் குடும்ப அட்டை தாரர்களும் இதன் பயனைப் பெறலாம். மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் பயன்பெற  புகைப் படத்துடன் கூடிய அடையாள அட்டை பெற்று பதிவு செய்து கொள்ள வேண்டியது அவசியம்.

தமிழக முதல்வரின் காப்பீடு திட்டத்தில் ரூ. 1முதல் 2 இலட்சம் வரை சில சிகிச்சை களுகும், மற்ற சிகிச்சைகளுக்கு 5 லட்சம் வரையிலான மருத்துவச் செலவுகளை ஓராண்டு காலத்திற்கு ஒரு குடும்பத்தினர் பயன்பெறலாம்.

அரசால் குறிப்பிட்ட மருத்துவமனைகள் மூலம் மருத்துவ சிகிச்சை பெறலாம் நோய்களும் சிகிச்சைகளும் இத்தி ட்டத்தின் மூலம் மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளப்படும் நோய்கள்.

இதய மற்றும் இதய நெஞ்சக அறுவை சிகிச்சை இதய இரத்தகுழா ய் அடைப்பு, பைபாஸ் சிகிச்சை பிறவி இதய நோயாளிகளுக்கான அறுவை சிகிச்சைகள், இதய வால்வு மாற்று அறுவை சிகிச்சை , ஆஞ்சியோ பிளாஸ்டிக் மற்றும்   பலூன் வால்வு பிளாஸ்டிக் தற்காலிக மற்றும் நிரந்தர பேஸ்மேக்கர் பொருத்துதல் , ரத்த குழாயில் ரத்த அடைப்பு நீக்கும் அறுவை சிகிச்சை செய்தல், அடைபட்ட ரத்த குழாயில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்க சிகிச்சை செய்தல்.

 

புற்றுநோய் மருத்துவம்

  • புற்றுநோய் கட்டிகளுக்கான மருத்துவ சிகிச்சை 
  •  புற்றுநோய் கட்டிகளுக்கான அறுவை சிகிச்சை 
  • புற்று நோய்க்கான கிரையோ தெரபி சிகிச்சை 
  •  கதிர்வீச்சு சிகிச்சை

 

சிறுநீரக நோய்கள்

 

  • சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை
  • மாற்று சிறுநீரகம் பொருத்துதல் 
  • சிறுநீரக கல் அதிர்வு அலை சிகிச்சை 
  • சிறுநீரகத்தை அறுவை சிகிச்சை மூலமாக அகற்றுதல்.
  • ப்ரோஸ்டேட் சுரபி நோய்க்கான சிகிச்சை

 

மூளை மற்றும் நரம்பு மண்டலம்

 

  • மூளை மற்றும் தண்டுவடத்தில் உயிர் காக்கும் அவசர அறுவை சிகிச்சைகள்
  • மூளை மற்றும் தண்டுவட நோய்களுக்கும் உயிர் காக்கும் சிகிச்சைகள்
  • கபாலத்தில் அடித்தளத்தில் உள்ளநோய்களுக்கு சிகிச்சை மற்றும் நவீன அறுவை சிகிச்சை தீராத வலிப்பு நோய்களுக்கான அறுவைசிகிச்சை
  • முதுகுத்தண்டு வடம் விலகுவதும் தொடர்பான  நோய்களுக்கு உண்டான அறுவை சிகிச்சை மூளையில் உள்ள ரத்தக்குழாய் மாற்றம் மற்றும் அடைப்பினால் ஏற்படும் பக்கவாதத்திற்கான கிச்சைகள் பிறவி குறைபாடுகள்
  • தலையில் நீர் வீக்கம் தொடர்பான நோய்களுக்கு உண்டான சிகிச்சைகள், வாத நோய்களுக்கான சிகிச்சை.

 

மூட நீக்கியல் அறுவை சிகிச்சைகள்

 

இடுப்பு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை, முழங்கால் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை, எலும்பு முறிவு மற்றும் மூட்டு விலகுதல் காண அறுவை சிகிச்சை, எலும்பு மற்றும் மூட்டு முறிவுக்கான மாற்று அறுவை சிகிச்சை, எலும்பு மூட்டு உள் அக நோக்கி கருவியின் மூலம் சரி செய்யப்படுகிறது.

 

கண் நோய் சிகிச்சை

 

  • விழித்திரை விலகல் அறுவை சிகிச்சை மற்றும் இதர மருத்துவ முறைகள், 
  • நீர் அழுத்த நோய்க்கான அறுவை சிகிச்சை, 
  • விட்ரெக்டமி அறுவை சிகிச்சை , கருவிழி மாற்று அறுவை சிகிச்சை, விழித்திரை நோய்க்கான லேசர் சிகிச்சை – லீனியர் ஆக்சிலேட்டர் சிகிச்சை

 

 கருப்பை நோய்கள்

புற்றுநோய் பொறுத்து கருப்பை மற்றும் சினைப்பைகள் அறுவை சிகிச்சை மூலமாக அகற்றுதல்.

நெஞ்சக நோய்கள்

  • நுரையீரல் சீழ்கட்டி நெஞ்சு உறை க்குள் நீர் கோர்த்தல் 
  • நெஞ்சு உறைக்குள் காற்று சேருதல் ஆகி யவற்றுக்கான முறையான  சிகிச்சை
  • இரத்த நோய்கள் தாலிசீமியா மற்றும் சிக்கிள் செல் இரத்த சோகை நோய்க்கான மருத்துவம் போன்ற நோய்கள் சரி செய்யப்படுகிறது

 

இதரப் பிற நோய்களுக்கான மருத்துவம்

  • தைராய்டு சுரப்பி அறுவை சிகிச்சை விபத்து மற்றும் இதர காயங்களுக்கு உள்நோயாளி சிகிச்சை தேவைப்படும் பெரிய அளவிலான அறுவை சிகிச்சைகள் கோமா மற்றும் மூளைக் காய்ச்சல் நோய்களுக்கு மருத்துவம் பிறவிக் குறைபாடுகளுக்கான அறுவை சிகிச்சைகள்
  • மருத்துவப் பரிசோதனையின்  மேற்கொள்ளும் பொ ழுது மேலே குறிப்பிடப்பட்டுள்ள  நோய்கள் தவிர  மற்ற நோய்களுக்கான பரிசோதனைகளுக்கு ஏற்படும் செலவுகள் சிகிச்சைக்கு முன்பும் பின்பும் தேவை ப்படும் மருந்து, மாத்திரைகள்மற்றும் போக்குவரத்துச் செ லவுகள் பட்டியலிடப்பட்ட சிகிச்சைகள் தவிர்த்து வேறு சிகிச்சைகளுக்கான செலவுகள் திட்டத்திற்கான மருத்துவமனைகள் தற்பொழுது அரசின் சார்பாக நடைமுறைப்படுத்தி வருவது இந்திய யுனைடெட் காப்பீடு நிறுவனம் ஆகும்.
  • இதன் மூலம் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது. தமிழக அரசு அனுமதிக்கப்பட்ட தனியார் மற்றும் அரசு பொதுநல மருத்துவமனைகளில் மட்டுமே சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • இந்த மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள சிகிச்சைகளுக்கான மருத்துவ செலவுகள் ஒன்றிணைந்து ஒரே தொகையாக குறிப்பிட்ட மருத்துவமனைக்கு மருத்துவச் செலவுகள் ஈடு செய்யப்படும்.

 

சிகிச்சை பெற வழிமுறைகள் :

பதிவு செய்தல்

காப்பீட்டு நிறுவனத்தால் வழங்கப்படும் சிறப்பு அடையாள அட்டையை காண்பித்தால் மட்டுமே பயனடைய முடியும். இந்த சிறப்பு அட்டை வழங்கும் வரை குடும்பத் தலைவராக இருப்பின் நலவாரிய உறுப்பினர் அட்டையில் சமர்ப்பிக்க வேண்டும். குடும்பத் தலைவர் தவிர்த்து மற்ற உறுப்பினர்களாக இருப்பின் நலவாரிய  உறுப்பினர் அட்டையுடன் சேர்த்து கிராம, நகர பஞ்சாயத்துகளாக இருப்பின் கிராம நிர்வாக அதிகாரி / நகராட்சி /மாநகராட்சியின் சம்பந்தப்பட்ட வரி வசூலிப்பாளரிடமிருந்து பெறப்படும் புகைப்பட அடையாளச் சான்றிதழ் (அல்லது) அரசாங்கத்தால் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய மற்ற அடையாளச் சான்று மற்றும் குடும்ப அட்டை நகல் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.

எந்த ஒரு நலவாரிய உறுப்பினராக அல்லாத நபர்கள், இத்திட்டத்தின் மூலம் பயனடையத் தகுதியாக ஏனைய அனைவரும் குடும்ப அட்டை யின் நகல் மற்றும் கிராம நிர்வாகஅதிகாரி / வரி வசூலிப்பவர் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அலுவலரால் வழங்கப்படும் குடும்ப வருமான வரி சான்றும் கிராம / நகர பஞ்சாயத்துக்களாக இருப்பின் சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலராலும், நகராட்சி / மாநகாராட்சிகளில் வரி வசூல் அலுவலராலும் பயனாளியின் புகைப் படத்துடன் கூடிய சான்றும் சமர்ப்பிக்க வேண்டும்.

அரசாங்கத்தால் வழங்கப்பட்டுள்ள புகைப்படத்துடன் கூடிய ஏதாவது ஒரு அடையாளப் அட்டையை சமர்ப்பிக்க வேண்டும். முதல் முறையாக சிகிச்சை மேற்கொள்ளும் மட்டுமே சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அதிகாரி வழங்கும் சான்றிதழ் அல்லது மேல் குறிப்பிடப்பட்டுள்ள வேறு சான்றிதழ்களை சமர்ப்பித்து பயனடைய இயலும்.

அதன் பிறகு அடுத்து வரும் மருத்துவ சிகிச்சையின் பொழுது பயனீட்டாளர்கள் இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட அடையாள சிறப்பு அட்டையை பயன்படுத்தி மட்டுமே தொடர்ந்து பயனடைய இயலும்.

 

 

 

Leave a Reply