பணத்தை சேமிக்க அருமையான டிப்ஸ்
நாம் எல்லாரும் கஷ்டப்பட்டு தான் பணத்தை சம்பாதிக்கிறோம். ஆனால் மாத இறுதியில் நமக்கு ஒரு பணம் கூட மிஞ்சாத நிலை ஏற்படுகிறது. இந்த நிலையில் சேமிப்பு பற்றி யாரும் நினைத்துப் பார்க்க நேரமில்லாமல் இருக்கும் நிலை இருக்கிறது. ஆனால் சேமிப்பு என்பது அனைவருக்கும் அவசியமான ஒன்று என்பதை விளக்கிக் கூறுகின்றனர் நிதி வல்லுநர்கள்.வேகமாக முன்னேறி வரும் உலகில் சேமிப்பு என்பது பலருக்கும் பாக்கியமாக தெரிகிறது. சேமிப்பின் உண்மையான உணர்வை நீங்கள் புரிந்து கொண்டால் உங்கள் எதிர்கால வாழ்க்கைக்கு தேவையான சில தொகையை ஒவ்வொரு மாதமும் எடுத்து வைக்க முடியும். இதன் மூலம் உங்கள் வாழ்க்கையை சிறப்பாக வாழ இயலும்.இதற்காக சில அடிப்படை பயனுள்ள வழிகள் உள்ளன. இதை பயன்படுத்தி அனைவரும் சேமிக்க தொடங்கலாம்.உலகம் முழுவதும் சேமிப்பை ஊக்குவிக்க பல்வேறு நிதி நிறுவனங்கள் முயற்சி செய்து வருகின்றன. இந்த நிலையில் உங்கள் பணத்தை சரியாக சேமிக்க எப்படி திட்டமிடுவது என்பதை பற்றி பார்க்கலாம்?.
உங்கள் செலவினை பதிவு செய்வது:
உங்களது செலவினை பதிவு செய்து வைப்பது நீங்கள் பணத்தை சேமித்து வைக்க செய்ய வேண்டிய பணிகளில் முதல் அடிப்படை படியாகும்.நீங்கள் செய்யும் அனைத்து வகையான செலவுகளையும் பதிவு செய்து வையுங்கள். இதை செய்வதன் மூலம் எவ்வளவு செலவழிக்கிறீர்கள் மற்றும் எதற்காக செலவழிக்கிறீர்கள் என்பதை உங்களால்கணிக்க இயலும் மற்றும் செலவுகளை குறைக்கவும் முடியும்.
செலவுகளில் கவனம்
ஒவ்வொரு மாதமும் உங்கள் செலவுகளை கூர்ந்து கண்காணிப்பது தான் உங்களது சேமிப்பிற்கான முதல் படி. இதுபோன்று கண்காணிப்பதன் மூலம் தேவையில்லாத செலவுகள் ,வீண் செலவுகள் ஆகியவற்றை சரியாக கணிக்க இயலும். இதன் மூலம் வீண் செலவுகளை கட்டுப்படுத்தி சேமிக்க முடியும்.
பட்ஜெட் உருவாக்கம்:
உங்களது செலவுகளுக்கு ஏற்ப ஒரு மாதாந்திர பட்ஜெட்டை உருவாக்குங்கள். இறுக்கமான பட்ஜெட்டை உருவாக்குவதற்கு முக்கிய காரணம் உங்கள் செலவினங்களை கட்டுப்படுத்துவதற்கு ஆகும். பணத்தை சேமிக்க சிறந்த வழிகளில் ஒன்று உங்களுக்கு வருமானத்தை சரியான மற்றும் தெளிவான முறையில் பிரித்து செலவு செய்வது ஆகும்.
அடிமைத்தனம்
சிலருக்கு சில விஷயங்கள் மீது தீராத ஆசை இருக்கும். அது காலப்போக்கில் அடிமைத்தனமாகவும் மாறிவிடும்.உதாரணமாக சிகரெட் பிடிப்பது மது பழக்கத்திற்கு அடிமையாகுவது மற்றும் ஷாப்பிங் செய்வது இந்த விஷயங்களுக்கு சிலர் அடிமையாக இருப்பார்கள். இந்த பழக்கங்களை கட்டுப்படுத்துவது மற்றும் விடுபடுவதன் மூலம் பணத்தை மீதியாக்கி சேமிக்க முடியும்.
பணம் செலுத்துவது
முதலில் நீங்களே பணம் செலுத்துங்கள் . ஒவ்வொரு மாதமும் சம்பள நாளில் உங்களது செக்கிங் அக்கவுண்டில் இருந்து உங்களுக்கு சேமிப்பு அக்கவுண்ட்க்கு ஒரு ஆட்டோ டெபிட் ஆப்ஷனை உருவாக்கவும். இது உங்களுக்கு பணத்தை சேமிக்க உதவும்.
ஒவ்வொரு இரண்டு வாரங்களுக்கும் 2000 ஆக இருந்தாலும் சரி அல்லது 5000ஆக இருந்தாலும் சரி உங்கள் வருமானத்திற்கு ஏற்ப சேமிப்பை சரிவர பயன்படுத்தி சேமியுங்கள்.
முதலில் சேமிப்பு
ஒவ்வொரு மாதமும் வரும் வருவாயை செலவு செய்து விட்டு மீதமுள்ள தொகையை சேமிப்பது அதிக இடங்களில் பரவலாக காணப்படுகிறது. ஆனால் இதை தவிர்த்து முதலில் சேமித்து விட்டு பிறகு மீதமுள்ள தொகையை செலவு செய்வது சரியான சேமிப்பு என்கின்றனர் சேமிப்பு வல்லுநர்கள்.
பணசேமிப்பு இலக்கு
நீங்கள் விரும்பிய இலக்குகளை நெருங்குவதற்கான ஒரு வழி கூட்டு வட்டியின் சக்தியை புரிந்து கொள்வது. கூட்டு வட்டி என்பது ஆரம்ப கால அசல் பணம் மட்டும் கணக்கிடப்படாமல் முந்தைய காலங்களில் திரட்டப்பட்ட வட்டியையும் சேர்த்து வரும் பணமாகும்.எனவே நீங்கள் பணத்தை சேமிக்க திட்டமிட்டால் இதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.பணத்தை சேமிப்பதற்கு ஒரு இலக்கு நிர்ணயித்து சேமிப்பது சிறந்ததாகும். இதன் மூலம் ஒரு பாதையை உருவாக்க முடியும். சேமிப்பிற்கு குறுகிய கால இலக்குகளும் நீண்ட கால இலக்குகளும் நிர்ணயத்து சேமிப்பது சிறந்ததாகும்.
பணசேமிப்பு முதலீடு:
பணத்தை சேமிப்பதற்கு சிறந்த வழிகளில் ஒன்று முதலீடு. முதலீட்டிற்கு பின்னால் உள்ள முக்கிய யோசனைகள் ஒரு குறிப்பிட்ட கால பகுதியில் ஒருவழக்கமானவருமானத்தை அல்லது வருமானத்தை உருவாக்குவது. கால போக்கில் உங்கள் முதலீடுகள் வளரும். உங்களது பணம் மற்றும் பணத்தின் மதிப்பு உயரும்.நீங்கள் சேமிக்கும் பணத்தை அப்படியே வைத்திருந்தால் பணம் வளராது. அதை சரியான விதத்தில் முதலீடு செய்து சேமிப்பதே சரியானது. இதற்கான பல்வேறு திட்டங்கள் உள்ளன .
மேலும் படிக்க : 50/30/20 RULES FOR MONEY SAVING
உதாரணம் :
தங்கம், பங்குகள் ,மியூச்சுவல் ஃபண்ட் , டெபாசிட் போன்றவற்றில் சரியான விதத்தில் முதலீடு செய்து சேமிப்பது சிறந்தது.
சேமிப்பு கால்குலேட்டர்
- பணத்தை சேமிக்க சேமிப்பு கால்குலேட்டரை பயன்படுத்தவும்.
- இந்த சேமிப்பு கால்குலேட்டர் நமக்கு இரண்டு விதமாக பயன்படுகிறது.
- ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குள் நமது இலக்குகளை அடைய உதவுகிறது.
- ஒரு குறிப்பிட்ட காலத்தில் நான் எவ்வளவு பணத்தை சேமிக்க வேண்டும் என்பதை மதிப்பீடு செய்யவும் இது உதவுகிறது.
- எனவே இதை பயன்படுத்தி சேமிப்பது சிறந்ததாக கருதப்படுகிறது.
ஆரோக்கியமான உடல்நலத்தின் மூலம் பணத்தை சேமிப்பது
தினமும் காலையில் தேநீர் விடுதிக்குச் சென்று தேநீர் பருகுவதை தவிர்க்கவும் ஒரு நாளைக்கு மூன்று வேளை விதம் ஒரு தேநீரின் விலை பத்து ரூபாய் என்றால் ஒரு நாளைக்கு 30 முதல் 50 ரூபாய் வரை தேநீருக்கு மட்டும் செலவாகும். மாதம் 1000 முதல் 1500 வரை செலவாகிறது. இதற்கு பதிலாக வீட்டிலேயே தேநீருக்கு தேவையான பொருட்களை வாங்கி வைத்து தேநீர் தயார் செய்து பருகலாம். இதன் மூலம் மாதம் அந்த 1500 ரூபாய் பணம் மிச்சம் ஆகும்.
நீங்கள் வேலைக்கு செல்லும் பொழுது மதிய உணவை தயார் செய்து எடுத்துச் செல்லுங்கள். ஏனென்றால் ஹோட்டலில் சாப்பிட்டால் ஒரு நாளைக்கு மூன்று வேளை சேர்த்து குறைந்தது 150 முதல் 200 ரூபாய் செலவாகும். இது மாதத்திற்கு 4000 முதல் 6000 வரை கணக்காகிறது. நீங்கள் வீட்டிலேயே தயார் செய்து எடுத்துச் செல்வதன் மூலம் இந்த பணம் மிச்சமாகிறது.
நீங்கள் அன்றாட உடற்பயிற்சி செய்ய ஜிம் அல்லது யோகா கிளப் பயன்படுத்துவீர்கள் என்றால் அதை தவிர்த்து வீட்டிலேயே முறையாக உடற்பயிற்சி செய்யுங்கள்.
உங்களது சொந்த உணவை வீட்டிலேயே வளர்ப்பது
உங்களது அன்றாட வாழ்க்கைக்கு தேவையான உணவுப் பொருட்களை வீட்டிலேயே விளைய வைத்து பயன்படுத்துவது உங்களது உணவுப்பொருள் மளிகை சாமான் செலவை குறைக்கிறது. உங்கள் வீட்டில் சிறிய இடம் அல்லது கொள்ளை புறம் ஏதாவது இருந்தால் அதில் உங்களுக்கு தேவையான அன்றாட உணவு பொருட்களை விளைய வைத்து பயன்படுத்தலாம். உதாரணமாக வெங்காயம் தக்காளி கருவேப்பிலை பாகற்காய் ரோஸ் மற்றும் துளசி ஆகிய செடிகளை வீட்டிலேயே வளர்க்கலாம். இதற்கு இணையதளத்தில் இதற்கான பானைகள் மற்றும் இதற்கு தேவையான பொருட்கள் கிடைக்கின்றன அவற்றை குறைந்த விலையில் உள்ளதை பார்த்து தேர்வு செய்து முறையாக எடுத்து அதை பயன்படுத்தலாம்.
ஷாப்பிங்
பொதுவாக ஷாப்பிங் செய்யும் போது நாம் பிராண்ட் பொருட்களை வாங்குவதே வாடிக்கையாக கொண்டிருக்கிறோம். இந்த பிராண்ட் பொருட்கள் விலை அதிகமாக இருந்தாலும் அதை கவனிக்காமல் பொருள் வாங்கினால் சரி என்று அதிக விலை கொடுத்து அந்த பொருளை வாங்கி செல்கின்றோம். அதற்கு பதிலாக பொதுவான பிராண்ட் பொருள்கள் குறைந்த விலைக்கு தரமானதாகவும் கிடைக்கிறது. இது 30 முதல் 40 சதவீதம் விலை குறைவாகவும் கிடைக்கிறது. இதை வாங்கி பயன்படுத்துவது சிறந்ததாக இருக்கும்.
பொதுவானபிராண்டுகள்
உணவுப் பொருட்கள், குளியல் தயாரிப்புகள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் ஆகியவை ஆகும்.
வெளியே செல்வதை தவிர்ப்பது
நீங்கள் தேவையில்லாத விஷயங்களுக்கு வெளியே சென்று நேரத்தை செலவிடுவதை தவிர்க்கலாம். படம் பார்க்க செல்வது சிற்றுண்டிஅருந்த செல்வது போன்றவற்றைத் தவிர்த்து உங்கள் வீட்டிலேயே உங்களது நண்பர்களை வரவழைத்து ஒவ்வொருவரும் ஒரு உணவை தயார் செய்து கொண்டு வரச் செய்து அதை பகிர்ந்து மகிழ்வோடு சாப்பிடலாம். படத்திற்கு செல்வதற்கு பதிலாக உங்கள் வீட்டிலேயே திரையை அமைத்து நண்பர்களுடன் சேர்ந்து தலையணை மற்றும் போர்வை மூலம் உங்களது வசதிக்கேற்ப அமர்வதற்கான இடத்தை உருவாக்கிக் கொண்டு படம் பார்க்கலாம்.
முடிவுரை
நீங்கள் பொருளாதார ரீதியாக சுதந்திரமாக மற்றும் சிறந்த இடங்களுக்கு பயணம் செய்வது, உங்கள் குடும்பத்திற்கு நல்ல வாழ்க்கை முறையை கொடுத்துக் கொண்டிருப்பது போன்ற விஷயங்களை சிறப்பாக செய்து கொண்டிருக்கிறோம் என்ற கற்பனையில் இருக்கிறீர்கள். நீங்கள் எவ்வளவு அதிகமாக சேமிக்கிறீர்களோ அவ்வளவு நல்ல வாழ்க்கையை மற்றும் சிறந்த வாழ்க்கையை வாழ முடியும். எனவே தள்ளி போடுவதை நிறுத்திவிட்டு இப்பொழுது சேமிக்க துவங்குங்கள்.